ஆந்திரா : இரு மாதங்களில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை!
நீட் தேர்வுக் குளறுபடிகளைப் போன்று, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த இரு மாதங்களில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அதிகளவில் ஐஐடி மருத்துவ படிப்புக்களுக்காக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வரும் போதும் தேர்வு பயிற்சி மையங்களில் கொடுக்கப்படும் கடும் அழுத்தம், அதிக நேர கல்வி முறை, ஆசிரியர்களின் கடும்போக்கன கற்பித்தல் முறை என்பவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாதும், அடிக்கடி கடும் வசைச் சொற்களுக்கு ஆளாவதால், அவமானம் தாங்காமலும் இத்தற்கொலைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment