இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு புறத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் கருகி 46 பேர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலை வணிக வளாகங்களும் குடியிருப்புக்களும் அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்ததால் தான் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 100 பணியாளர்கள் இந்த ஆலையில் வேலை செய்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
மீட்புப் பணி இன்னமும் தொடர்வதாகவும் 10 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் தீயில் முற்றாகக் கருகி சிதைந்து விட்டதால் அடையாளம் காணப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மிக வேகமாகப் பரவிய தீ மதியம் அளவில் முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தோனிசியாவில் இது போன்ற பல பட்டாசுத் தொழிற்சாலைகள் மிக மோசமான பாதுகாப்புத் தரத்துடன் காணப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment