Saturday, October 28, 2017

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டி பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தீரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலம் பாதிக்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer