இயக்குனர் ஷங்கர் தற்போது இம்சைஅரசன் 24ம் புலிகேசி என்ற படத்தை தயாரிக்க ஆயத்தமானார். இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் காமெடி நடிகர் வடிவேலு தான் ஹீரோவாக நடித்தார். இவரையே தற்போது இரண்டாம் பாகத்திற்கு புக் செய்தனர். இவர் ஷூட்டிங் சரியாக வருவதில்லையாம். இழுத்தடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும், இதுபற்றி இயக்குனர் ஷங்கர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளாராம். “வடிவேலுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பபெற்று கொடுங்கள், வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுத்துக்கொள்கிறோம்” என ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு வடிவேலு படத்தில் நடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment