Tuesday, October 24, 2017

மேஷம்: மாலை 5.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போங்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5.41 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். சொத்து பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுக்கு உதவுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கடகம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு கலைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்: மாலை 5.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மாலை 5.41 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

மீனம்: சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer