Thursday, October 19, 2017

உலகில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான மேன் புக்கர் விருதை இவ்வருடம் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கரான ஜோர்ஜ் சாண்டர்ஸ் என்பவர் சுவீகரித்துள்ளார்.

லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்துக்காக இவருக்கு இப்பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. 1969 முதல் வழங்கப் பட்டு வரும் இந்த விருதை சுவீகரிக்கும் 2 ஆவது அமெரிக்கர் ஜோர்ஜ் சாண்டர்ஸ் ஆவார். முன்னதாகக் கடந்த வருடம் பால் பீட்டி என்ற அமெரிக்கர் மேன் புக்கர் விருதைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஜோர்ஜ் சாண்டர்ஸின் லிங்கன் இன் தி பார்டோ புத்தகம் சுமார் 144 இலக்கிய நாவல்களுடன் போட்டியிட்டு இவ்வருடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க முன்னால் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் மற்றும் சிறுவயதிலேயெ உயிரிழந்த அவரின் 11 வயது மகன் மற்றும் அமெரிக்கப் போர்கள் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகின்றது. இந்தப் புத்தகத்துக்காக வழங்கப் பட்டுள்ள மேன் புக்கர் விருது மூலம் சாண்டர்ஸுக்கு £50 000 யூரோக்கள் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது.

இவ்வருடம் மேன் புக்கர் விருதை சுவீகரித்த லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகம் ஒரு ஆராய்ச்சி வகை நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer