மெக்ஸிக்கோவின் நூவா லியோன் மாகாணத்திலுள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள காயமடைந்த கைதிகளில் 8 பேரின் நிலமை மோசமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது. கலகத் தடுப்புப் போலிசாரால் இந்தக் கலவரத்தை அடக்க இயலாத காரணத்தால் கோபமடைந்த சிறைக் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர் சிறைச்சாலைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கடெரெய்ட்டா சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த கலகத்தில் சுமார் 250 கைதிகள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகின்றது.
மெக்ஸிக்கோவில் பொதுவாகவே சிறைச்சாலைகளில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களால் விளைவிக்கப் படும் கலகங்கள் காரணமாக அதிகம் பேர் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது. மெக்ஸிக்கோ அரச தரப்புப் பேச்சாளர் நேற்றைய சம்பவம் குறித்துக் கூறுகையில் சிறைக் கைதிகள் 3 பாதுகாவலர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் தான் வன்முறையை அடக்கக் கடினமாக இருந்தது என்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவின் டோப்போ கிக்கோ என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thursday, October 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment