நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்து வரும் ‘பலூன்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியிருக்கிறார் அஞ்சலி. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது.
இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
தன்னுடைய டப்பிங் பணியை தொடங்கியிருக்கிறார் அஞ்சலி. இதனை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Monday, September 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment