Monday, September 18, 2017

ராகவேந்திரா லாரன்ஸ், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா பேமிலிக்கு 15 லட்சம் கொடுத்ததாக கேள்வி. விளம்பரமில்லாமல் செய்த உதவி என்று அவர் தரப்பு ஆட்களே அதற்கப்புறம் ஒவ்வொரு மீடியாவுக்கும் போன் செய்து, ‘அந்த நியூசை போட்ருங்க.

ஆனால் நாங்களோ, அவரோ சொன்னது போல இருக்க வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டதுதான் பயங்கர கொடுமை.

திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த லாரன்சிடம், “நீங்க அனிதா பேமிலிக்கு 15 லட்சம் கொடுத்தீங்களா?” என்று நிருபர்கள் கேட்க, “அது எனக்கும் அனிதா பேமிலிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்” என்று பதிலளித்தார் அவர்.

‘அடக்கமும் தற்பெருமையும் என்னைக்குய்யா ஒண்ணா இருந்திச்சு?’ என்று கேள்வி கேட்பவர்கள், ஒருமுறை லாரன்ஸ் படத்தை எடுத்து கண்ணருகே பார்த்துவிட்டு பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer