“பிக் பாஸ், மனசளவில் ரொம்ப ஸ்மால் பாஸ் ஆக இருக்காரேப்பா...” என்று இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் புலம்பினால், அதற்கு முழு பொறுப்பும் பிக் பாஸ் அன்றி வேறில்லை. வேறொன்றுமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஸ்கஷனுக்காக சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்ட ரூம் போட்டுக் கொடுத்ததாம் நிர்வாகம்.
அந்த ஓட்டலுக்கு போன கமல், வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்வார் என்று நிர்வாகம் நினைக்க.... அவரோ, பர்மனன்ட்டாக அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்.
தினந்தோறும் வருகிற பில், திடுக் திடுக்கென எகிற வைக்கிறதாம். காலி பண்ணுங்க என்று சொல்லவும் தயக்கம்.
தானாகவே காலி பண்ணிட மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு. அங்க வச்சு ஒங்க சினிமா வேலையெல்லாம் பார்க்குறீங்களே நியாமா?
என்ற கொந்தளிப்பு எல்லாமுமாக கலந்து பேஸ்த் அடித்துப் போயிருக்கிறதாம் சேனல்.
Wednesday, September 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment