இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சோலோ. சிவன் கடவுளின் நான்கு அவதாரங்களைத் தழுவி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய நான்கையும் சுற்றிவரக்கூடிய கதையாக சோலோ திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவனை குறிப்பிடுகின்ற சேகர், த்ரிலோக், ருத்ரா, சிவா என்று நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளாராம். ஏற்கனவே துல்கரின் சிவா, ருத்ரா இவ்விரண்டு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளிந்துள்ள நிலையில், வரும் வாரங்களில் சேகர், த்ரிலோக் கதாபாத்திரங்களின் புகைப்படங்களையும் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளனர்.
சோலோ, இரண்டு காதல் கதைகள் மற்றும் இரண்டு ஆக்ரோஷமான கதைகளைக் கொண்டுள்ளது. சிவன் காதல், கோவம் இவ்விரண்டையும் வெளிப்படுத்துவதில் சற்று உணர்ச்சி அதிகமாக இருக்கும். அதுதான் இப்படத்தின் கதைக் கருவும் கூட.
Friday, September 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment