Tuesday, September 5, 2017

முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் லலித்ஜயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியா கூட்டுப் பாலியயல் வல்லுறவு படுகொலை வழக்கின் பிரதான சந்தேகத்துக்குரியரான சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பேரிலேயே லலித்ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கூட்டுவன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகத்துக்குரியரான சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் குற்றப் புலனாய்வு சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி வழக்கு விசாரணை தொடர்பாக மேலதிக அறிக்கையொன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்தே பிரதி காவல்துறை அதிபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer