விஐபி-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா. இவர் தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா உடன் பெல்லி சூப்புழு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பார்த்து ரசித்த இயக்குனர் கவுதம் மேனன், தற்போது அவர் இயக்கிவரும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்.
தற்போது 99 என்கிற சீரியல் கில்லர் குறும்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவும் ரித்து வர்மா நடிக்கவிருக்கிறார். இதுபற்றி நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில், எனது அடுத்த படத்தின் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். காத்திருக்க இயலவில்லை சகோதரரே. அடுத்த மாதத்தை நோக்கி காத்திருக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார். இப்படத்தில் துல்கரின் பெயர் சித்தார்த் என்றும். காதல் மற்றும் திகில் கலந்த திரைப்படமாகவும் இப்படம் உருவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான எஸ்.ஹர்ஷவர்தனா இயக்கத்தில் கலையரசனுக்கு ஜோடியாக சைனா படத்திலும் ரித்து வர்மா நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் சென்னையில் உள்ள பர்மா பஜார், சௌகார்பேட் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Friday, September 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment