அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட் தரத்தில் வெளியாகி இருந்தது விவேகம் படம்.
படம் என்னனோ ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சங்களை சந்தித்தாலும் வசூலிலும் வரவேற்பிலும் தெறிக்க விட்டு மாஸ் காட்டியது, விமர்சனங்களை புறம் தள்ளி வசூலில் தெறிக்க விட்ட ஒரே படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்த படத்தை பற்றி விமர்சனம் என்ற பெயரில் தகாத வார்த்தைகளால் தனி நபர் தாக்குதல் நடத்தி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தார் ப்ளூ சட்டை மாறன் என்பவர்.
இதனை திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர், இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து மனம் திறந்து பேசி உள்ளார்.
படத்தை பார்த்த அவர் கூறியதாவது, விவேகம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது, முதல் முயற்சிக்காக சிவாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அஜித்தின் கடுமையான உழைப்பு என் உடம்பில் வலியை ஏற்படுத்தியது, அனிருத்தின் இசை படத்தை இடைவெளி இல்லாமல் நிரப்புகிறது.
எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் வெற்றியின் செயல்கள் கண்களை இமைக்க விடமால் உற்று நோக்க வைக்கிறது என ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டி உள்ளார்.
மேலும் விமர்சனங்கள் செய்யும் போது வன்மையான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
Tuesday, September 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment