Thursday, September 28, 2017

முழு ஸ்கிரிப்ட் இல்லாமல் படம் எடுக்க கிளம்புவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை இனியாவது புரிந்து கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ படம் எடிட்டிங் முடிந்த பின்பும் கூட நாலு மணி நேரம் இருக்கிறதாம்.

இதை எப்படி குறைப்பது? என்று விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள் அத்தனை பேரும்.

மூணு மணி நேர படமா விட்டால் என்ன? என்று கேட்கும் மோகன் ராஜாவை பரிதாபமாக லுக் விடுகிறாராம் சிவா.

அது கிடக்கட்டும்... நறுக்கி எறியப்படுவதெல்லாம் லட்சங்களும் கோடிகளும் என்கிற உண்மை புரியாமலிருக்கும் இயக்குனர்களை, எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? வரவர மோகன்ராஜா பாலா போல் ஆனாரே... என்று கிண்டலடிக்குது கோடம்பாக்கம் சினிமா மார்க்கெட்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer