கொள்ளையடித்து தானம் வழங்கினால் எந்த நன்மையும் கிடைக்காது என்று புத்த பகவானின் பிள்ளைகளுக்கு சொல்லத் தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால், கொள்ளையடித்தவர்களுக்காக தானம் பெறும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால், யாருக்கும் நன்மை கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சீல்’ துணி விநியோகம் தொடர்பில் மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக தானம் பெறும் முயற்சியின் கூட்டு எதிரணியின் பௌத்த பிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Sunday, September 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment