வட கிழக்கு பகுதியில் சுமார் 14,000 ஆயிரம் பர்மா முஸ்லீம்களை கொண்டு வந்து குடியேற்ற இலங்கை முஸ்லீம்கள் மைத்திரியோடு பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. நடந்தது என்ன ? விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்....
பர்மாவில் (மியன்மார்) ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் கட்டவிழ்த்து நடாத்திவருகின்றது அந் நாட்டின் பௌத்த பேரினவாதம். ”ஜனநாயகத்தின் தேவதை” என மேற்குலக நாடுகளால் வர்ணிக்கப்படும் அந் நாட்டு மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பௌத்த மதத்தைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டியான ”ஆங் சான் சூ சீ” கூட இந்த இன வெறித் தாக்குதல்களை கண்டிக்காமல் இருப்பது அந் நாட்டு முஸ்லீம்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பௌத்த பேரினவாதிகளுக்கு எதிராக ரொகிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த சில போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந் நாட்டில் ரொகிங்கியா இன மக்கள் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பர்மாவில் இன அழிப்புத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவான முஸ்லீம்கள் அந் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றார்கள். இவர்களுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அளித்து வருகின்றன. ஆனால் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் குறித்த முஸ்லீம்களை தமது நாடுகளுக்குள் அகதிகளாக அனுமதிக்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் உள்ள முஸ்லீம் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பர்மா முஸ்லீம்களில் 14 ஆயிரம் அகதிகளை இலங்கையில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஜனாதிபதி மைத்திரி சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது. இலங்கையில் உள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லீம் முக்கியஸ்தர்கள் இந்த ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக உள்ளார்கள். சிறிலங்கா ஐக்கிய முஸ்லீம் சங்கம் என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பின் கோரிக்கையானது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லீம் கட்சிகளின் கோரிக்கையாகவே கருதப்படுகின்றது. பர்மாவில் இருந்து வடக்கு பகுதியில் குடியேறும் முஸ்லீம்களில் ஏற்கனவே பர்மாவில் போராட்டக் குழுக்களில் இருந்த போராளிகளும் ஊடுருவி அவர்களுடன் சேர்ந்து குடியேறலாம். வடக்கு பகுதியில் அவர்கள் பாசறைகளை அமைத்து பல ஆயுதப்பயிற்சிகளை மேற் கொண்டு பர்மாவுக்கு சென்று போராட்டங்களில் ஈடுபடுவதுடன் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கும் ஆதரவளித்து போராட்டங்களில் ஈடுபடலாம்.
இப்படி நடந்தால் வட கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலை என்னவாகும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்...
Athirvu
Home
»
Sri Lanka
»
இந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார்கள்: நடக்கும் பெரும் சதி அம்பலம்!
Saturday, September 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment