Monday, September 18, 2017

மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்றொரு தகவல் கோடம்பாக்கத்தை கரைபுரள வைத்திருக்கிறது. ஏன்? சிம்பு, கவுதம் மேனன் மாதிரியான இயக்குனர்களுடன் இணையும் போது இன்னொரு பரிமாணத்தை எட்டுகிறார்.

மணிரத்னம் படமும் அவருக்கு அப்படியொரு வளர்ச்சியை தரும் என்பதால்தான். ‘இந்த நம்பிக்கையை சிம்பு காப்பாற்றுவாரா?

அவரது சுழி சும்மாயிருக்குமா? கவுதம்மேனனை கதற விட்டதை போல, மணி சாரையும் கதற விடுவாரா?’ என்ற துணைக்கேள்விகளையும் அதே கோடம்பாக்கம் கேட்க ஆரம்பித்திருப்பதுதான் துரதிருஷ்டம்.

‘ரசிகர்களுக்காகதான் நடிக்கிறேன். இல்லேன்னா சினிமாவே வேணாம்னு போயிருவேன்’ என்று மிரட்டிய சிம்பு, மணிரத்னத்தின் மடியில் அமர்வாரா? அல்லது மண்டைமேல் ஏறி முடியை கலைப்பாரா? போக போக புரியப்போவுது!

0 comments :

Post a Comment

 
Toggle Footer