இலங்கையின் புதிய அரசியலமைப்புத் தொடர்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் பேசுவதற்கு இன்னமும் காலமுள்ளது. அவருடன், இலங்கையின் பொருளாதார, வெளிவிவகார விடயங்கள் பற்றியே பேசினேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட திலக் மாரப்பன, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் இந்தியப் பிரதமரையும் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Tuesday, September 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment