ஒருவழியாக இமான் அண்ணாச்சியும் ஹீரோவாகிறார். சத்ரபதி என்ற படத்தின் இயக்குனர் அண்ணாச்சிக்கு ஒரு கதையை சொல்லி அவரை கரைத்துவிட்டார்.
ஏதோ டி.வி, சின்ன சின்ன படம்னு வாய்ப்புகள் வந்துகிட்டு இருக்கு.
ஹீரோன்னு சொல்லி ஒரேயடியா கதவ சாத்திராதீங்க என்றாராம் அண்ணாச்சி.
யதார்த்தம் புரிந்தவர் என்றாலும், ஹீரோ ஆசைக்குள் விழாத நபர்கள் உண்டா? சந்தானம், வடிவேலு கதைகளை அவருக்கு சொல்லி புரிய வைங்கப்பா என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
இது ஒருபுறமிருக்க, குழந்தைகளை கவர்வது போல படம் இருக்கட்டும் என்று முடிவெடுத்த அண்ணாச்சி, 20 குழந்தைகளை இதில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
அவங்கதான் ஹீரோ. நான் ச்சும்மா... என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்.
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment