Sunday, September 17, 2017

பெப்ஸி-தயாரிப்பாளர் சங்க மோதலால் பல படங்களின் ஷுட்டிங்குகள் முடக்கமாகி நின்றுவிட்டன. முன்னணி நிறுவனங்கள் சமாளித்துக் கொண்டாலும், சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் பாடு திண்டாட்டம்தான்.

அதிலும் பா.விஜய் ஒரு படத்தை தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இதற்காக 20 லட்ச ரூபாயில் செட் போட்டிருக்கிறார்கள். இடத்திற்கான தின வாடகை 33 ஆயிரம். ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கான பணத்தை அழுது வருகிறார் அவர்.

‘‘சீக்கிரம் ஸ்டிரைக்கை முடிங்க. இல்லேன்னா உறுதியான ஒரு முடிவுக்கு வாங்க” என்று கதறி ஒரு ஆடியோ பைலை அனுப்பி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு.

அதுமட்டுமல்ல... மழை வந்தால் செட்டு காலி. அதற்காக மழை வராமலிருக்கணும் மகாதேவா என்று வேண்டி வருகிறாராம் தினந்தோறும்!

எறும்பு குளிக்க பனித்துளி போதும். யானை குளிக்க குளம் குட்டை வேணும்! தண்ணி தண்ணிதான். தவிப்பு தவிப்புதான்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer