அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடியாக வலம்வரும் விஜய் தேவேராகொண்டா, ஷாலினி பாண்டே மீண்டும் இணையவிருக்கிறார்கள். தமிழில் நடிகையர் திலகம் என்றும், தெலுங்கில் மகாநதி என்றும் உருவாகிவரும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இவ்விருருவரும் நடிக்கவிருக்கின்றனர்.
இப்படத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன், சமந்தா என்று பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்திருக்கிறார்கள். நடிகர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும், நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே நடிகையர் திலகம் படத்தில் நடிகை ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அர்ஜுன் ரெட்டி படத்தைப் பற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் வலைதளத்தில், அர்ஜுன் ரெட்டி படம் பார்த்தேன். காதல் கதைகள் என்னுடைய கோப்பை தேநீர் அல்ல என்றாலும், இப்படத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. விஜய், ஷாலினி மற்றும் நண்பர்கள் அனைவரின் கதாபாத்திரமும் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருந்தன. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தின் வசனம் என்று அனைத்தும் நன்றாக இருந்தன. இவை அனைத்தும் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்க அவர்களையே சாரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷாலினி பாண்டே நடிகையர் திலகம் படம் மட்டுமின்றி, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உடன் தெலுங்கு ரீமேக் 100% லவ் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Friday, September 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment