எத்தனையோ படங்களில் அற்புதமாக நடித்து வந்த விதார்த், ‘குற்றமே தண்டனை’ என்றொரு சொந்தப்படம் எடுத்தார். பிடிச்சது சனி. அதுவே அவருக்கு தண்டனை ஆகிவிட்டது. தன்னுடைய காரை கூட விற்றுவிட்டு கடன் கட்டுகிற நிலைமைக்கு ஆளாகிவிட்டார். நாள்தோறும் கடன் தொல்லை.
இந்த நேரத்தில்தான் பாரதிராஜாவிடமிருந்து அழைப்பு வந்ததாம்.
அவரே தயாரிக்கும் ஒரு படத்திற்காக நல்ல சம்பளம் தந்ததுடன், தனது கார் ஒன்றையும் அவருக்கு கொடுத்திருக்கிறார்.
இதை ஒரு மேடையில் சொல்லி விதார்த் நெகிழ, அதே மேடையிலிருந்த பாரதிராஜா “ஒரு நடிகன் தன் கஷ்டத்தை மேடையில் சொல்லவே கூடாது.
தப்பு பண்ணிட்டீயே தம்பி...” என்று வாஞ்சையோடு தட்டிக் கொடுத்தார். நிகழ்காலம் நிம்மதியை குலைத்தாலும், வருங்காலம் வளமாக இருக்க விதார்த்தை வாழ்த்துவோம்.
Thursday, September 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment