தமிழகத்தின் அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
19 சிறப்பு காவல்படைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியம் சம்பவம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார். அனைத்து சிறப்பு காவல்படை கம்பெனிகளும் தங்களது முகாம்களுக்கு திரும்பவும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நீட் உள்ளிட்ட போராட்டங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக சிறப்புக் காவல்படையினர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment