டார்லிங் 2 புகழ் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விதி மதி உல்டா’ படத்தின் புரமோ சாங் மற்றும் சிங்கிள் டராக் பாடல் தாறுமாறாக வர இருக்கிறது. முருகதாஸின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கத்தில் ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘விதி மதி உல்டா’. ‘டார்லிங் 2’ படத்தில் நடித்த ரமீஸ் ராஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார்.
மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால் அந்த விதியை மதியால் வெல்லமுடியுமா? முடியாதா? இதுதான் படத்தின் ஒன் லைன். அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தில், நட்புக்காக ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். “தாறுமாறா ஒரு பார்வை பார்க்க நேர்மாறா… என்ன அடிச்சி தூக்க” என்பதுதான் அந்த பாடலின் வரி. கபிலன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு ரமீஷ்ராஜா,
ஜனனி ஐயர் இருவரும் இணைந்து ஆடிப்பாட பாண்டிச்சேரியில் படமாக்கி உள்ளார்கள். தற்போது இந்த பாடலை அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் முடிந்து, தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
Monday, September 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment