சகிப்பின்மையும், வேலைவாய்ப்பின்மையும் இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கடந்த 12ஆம் தேதி உரையாற்றிய ராகுல், ‘‘உயர் மதிப்பு கரன்சி தடை நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்திய பிரபலங்கள், தெற்காசிய நிபுணர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஜனநாயக கட்சி ஆதரவு அமைப்பான அமெரிக்கர் முன்னேற்ற மையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அதன் தலைவர் நீரா டான்டண், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “இந்தியாவில் தேவையான வேலைவாய்ப்புகளை அரசால் உருவாக்க முடியாதது கவலை அளிக்கிறது. இதனால் அபாயகரமான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. சகிப்பின்மையால் தாக்குதல்கள் உலகளவில் நடக்கிறது. அதிலும் இந்தியாவில் இது அதிகரித்துள்ளது. இவை இரண்டும் இந்தியா சந்தித்துள்ள முக்கிய சவால்கள்.” என்றுள்ளார்.
Home
»
India
»
சகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள்: ராகுல் காந்தி
Wednesday, September 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment