அரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“சில் துணிகளை வழங்கிய விடயமே தற்போது பேசு பொருளாக இருக்கின்றது. தானே சில் துணிகளை வழங்குமாறு உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலிலேயே கூறியிருந்தால், அரச அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Monday, September 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment