Friday, September 8, 2017

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் முதல் ஹிந்தி திரைப்படமான ‘டாடி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், வெற்றி மாறனின் வடசென்னை படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்திலும் நடக்க இருக்கிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ், "வியப்பாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். ஆனால் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை" என கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் படத்தின் கதாநாயகர்கள் யார் யார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer