Tuesday, September 26, 2017

நடிகர் தனுஷ் தனது 'வுண்டர்பார் ஃப்லிம்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கும் முதல் மலையாளத் திரைப்படமான 'தரங்கம்' வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில்  டோவினோ தாமஸ், பாலு வர்கீஸ் இருவரும் முன்னணி பாத்திரங்களிலும், இவர்களுடன் சாந்தி பாலச்சந்திரன், நேஹா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

'திருமலை', 'தூள்' உள்ளிட்ட படங்களில் நடித்த மனோஜ் கே ஜெயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தீபக் மேனன் ஒளிப்பதிவில், அஸ்வின் ரெஞ்சுவின் இசையில், டோமினிக் அருண் இயக்கும் இப்படத்தை, தனுஷுடன் இணைந்து மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழில் 'டார்க் காமெடி' வகையில் பல படங்கள் வந்துள்ளன. மலையாளத்தில்,  'தரங்கம்' டார்க் காமெடி வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer