“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார்.
கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த விசாரணையில்,
குறித்த சம்பவம் ஃபரூக்கியின் வீட்டிலேயே நடைபெற்றது என்றும், அப்போது வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என்றும், உணர்வு வயப்பட்ட நிலையில், குறித்த மாணவி தனது அழைப்புக்கு இணங்கினாரா, இல்லையா என்பதையும் ஃபரூக்கியால் உறுதியாகச் சொல்ல முடியாதிருந்தது என்றும் ஃபரூக்கியின் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். நீதிபதி தனது தீர்ப்பின்போது, “பாலுறவுச் செயற்பாட்டின்போது, இருவரில் ஒருவர் அதற்கு மறுக்கிறாரா,
இல்லையா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. குறிப்பாக, இதுபோன்ற தருணங்களில் பெண்களின் நிலைப்பாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்தியாவில் கடும் விமர்சனங்களும், விவாதங்களும் ஆரம்பித்துள்ளன.
athirvu
Thursday, September 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment