மகளிர் மட்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை நிவேதிதா சதிஷ். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணனின் இளமை கதாபத்திரத்தில் நடிக்கின்றார். இதுபற்றி நிவேதிதா கூறுகையில், நான் என் ஐந்தாம் வகுப்பு முதல் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பதின்ம வயதிலேயே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன். இருப்பினும் என் பெற்றோர்கள் பள்ளி வாழ்க்கையை முழுமையாக முடித்த பின்புதான், உன் நடிப்பு ஆர்வத்தை தொடங்கவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் படவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்போதுதான் மகளிர் மட்டும் நடிப்பு தேர்வு நடைபெற்றது.
மேலும் அவர் கூறுகையில், ஒரு வழக்கமான பெண் கதாபாத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த கதாபாத்திரம் உணர்வை தூண்டுகிற விதமாக இருக்கவேண்டும். இறுதிச்சுற்று, டியர் ஜின்தகி போன்ற படங்களில் வருகிற, என்னை மிகவும் உற்சாகப்படுத்திய கதாபாத்திரங்களைப் போல.
ஆகாச வாணி, திஸ் ஐஸ் லவ் போன்ற பாடல்களில் நடித்திருப்பார் நிவேதிதா சதிஷ்.
தற்போது மனம் மற்றும் 24 படங்களின் இயக்குனர் விக்ரம்குமார் அடுத்து அக்கினேனி அகில், கல்யாணி ப்ரியதர்ஷன் இவர்கள் இருவரையும் வைத்து ஹலோ என்ற தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவேதிதாவும், அக்கினேனி அகிலுடன் இனைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஹலோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
Friday, September 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment