அடல்ட் காமெடி படங்கள் தமிழில் ரொம்பவே குறைச்சல். படம் முழுக்க டபுள் மீனிங் தெறிக்க தெறிக்க வசனங்கள் இருக்கும். கொடுமை என்னவென்றால், “என்னோட இமேஜ் கொத்துக்கறி ஆகிடும். நான் மாட்டேன்ப்பா” என்று நடிகைகள் (மட்டும்) ஒதுங்குவார்கள் இதுபோன்ற படங்களில் நடிக்க.
ஆனால் விரைவில் திரைக்கு வரப்போகும் ‘ஹரஹரமகாதேவகி’ படத்தில் நடிக்க நிக்கி கல்ராணியை அழைத்தாராம் டைரக்டர் சந்தோஷ்.
கதை சொல்லும்போதே அந்த டபுள் மீனிங் ஐட்டங்களை அள்ளி வீசினாராம்.
தமிழில் புரியாத சில வார்த்தைகளை கூட, “இதுக்கென்ன மீனிங், அதுக்கென்ன மீனிங்?” என்று கேட்டுத் தெளிந்த நிக்கி, விழுந்து விழுந்து சிரித்ததுடன் உடனே நடிக்கப் ஒப்புக் கொண்டதிர் ஆச்சர்யமில்லை.
இளசுகளின் பல்சை புடிச்சு பல்லாங்குழி ஆடுவதில், நடிகர்களை விட நடிகைகள்தான் டாப் என்று நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ? வௌங்கிரும்...!
Monday, September 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment