எரிவாயு குடுவைகள் ஏற்றிச்சென்ற வகனம் ஒன்று நடு வீதியில் வெடித்து சிதறியுள்ளது. அதிஷ்டவசமாக உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, Charente-Maritime, இல் RN 10 சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றே இது போல் பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
நடுவீதியில் இந்த விபத்து ஏற்பட்டிருந்த போதும் அதிஷ்ட்டவசமாக வேறு வாகனங்களுடனான விபத்துக்களோ, உயிரிழப்புக்களோ இடம்பெறவில்லை. சம்பவ இடத்தில் உடனடியாக 53 தீயணைப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, தீ கட்டுப்படுத்தப்பட்டது. எரிவாயு குடுவைகள் வெடித்ததற்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து 20 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Bordeaux-Paris சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மீட்புப்படையினர் வீதியில் இருந்து வாகனத்தை அகற்றியதன் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
Tuesday, September 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment