நீர்கொழும்பில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் சிறைச்சாலை பேருந்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், நீர்கொழும்பு புதிய வீதி பிரதேசத்தில் நேற்று(07) இரவு 9.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹர சிறைச்சாலையில் இருந்து நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு, இரண்டு சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற பேருந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் 36 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் ,குறித்த நபர் அவுஸ்திரேலியாவின் சுற்றுலா உணவகமொன்றில் தொழிலில் ஈடுபட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவியை பரிசோதித்த போது, விபத்து இடம்பெற்ற நிமிடங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த நபர் திருமணம் முடித்து ஒரு மாதத்தின் பின்னரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Friday, September 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment