தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த வழக்கு மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மூத்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவின் நெறிப்படுத்தலில், சட்டத்தரணி நிலந்தி டீ சில்வா மனுவைத் தாக்கல் செய்தார். தன்மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சட்டத்துக்குப் புறம்பாகப் பதவி நீக்கியிருப்பது, தனது சட்டபூர்வமான எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்துள்ளது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், தான் அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையீடு, தடுத்தல் மேற்கொள்ளக்கூடாது என்று, தடை விதிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும், தன்னுடைய அமைச்சின் சார்பில் எந்தவோர் அமைச்சரும் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தடை விதிக்குமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
Friday, September 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment