பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களை பிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
“புதிய கல்வி கொள்கைக்கு அமைய இலங்கையில் கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரபட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் 30 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட “பரிசோதகர் மேற்பார்வை” (Inspector Supervising) மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது. அதேவேளை, ஊர் ஊராகவும், தோட்டம் தோட்டமாகவும் சென்று பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை பிடித்து கொண்டு வந்து மீண்டும் அவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பகமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களை பிடித்து மீண்டும் இணைக்க முடிவு: வே.இராதாகிருஸ்ணன்
Tuesday, September 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment