Wednesday, September 27, 2017

படத்தை விற்கிற முறையில்தான் அந்த ஹீரோவின் அந்தஸ்து வெளிப்படும். முன்பெல்லாம் எம்.ஜி. என்ற முறை இருந்தது.

அவுட்ரேட் என்கிற முறையும் இருந்தது. எம்.ஜி. என்றால் விநியோகஸ்தர் போட்ட முதலீட்டை விட அதிகப்படியாக கலெக்ஷன் ஆகும் தொகையை தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் பகிர்ந்து கொள்வது.

அவுட்ரேட் என்றால் ஒரு தொகை கொடுத்து படத்தை வாங்கும் விநியோகஸ்தர், அது எவ்வளவு கலெக்ட் செய்தாலும் தானே வைத்துக் கொள்வது.

அது அதிகமாகவும் இருக்கலாம். போட்ட பணத்தை விட குறைவாகவும் இருக்கலாம். இவை இரண்டை தவிர இன்னொரு முறை இருக்கிறது.

டிஸ்ட்ரிபியூஷன்! ஒருவேளை தயாரிப்பாளருக்கு கொடுத்த பணத்தை படம் வசூல் செய்யாவிட்டால், எவ்வளவு நஷ்டமோ, அந்த பணத்தை தயாரிப்பாளர் திருப்பித்தர வேண்டும்.

இந்த முறையில்தான் மெர்சல் படத்தை விற்றிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பாளரின் இந்த முடிவால் விஜய் கொஞ்சம் அப்செட் என்கிறது இன்டஸ்ட்ரி.

0 comments :

Post a Comment

 
Toggle Footer