சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.
இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று தமிழகம் வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Wednesday, September 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment