Friday, September 15, 2017

நம்மள பற்றி கான்ட்ரவர்ஸி வந்து ரொம்ப நாளாச்சு. யாரு கூடவாவது சேர்த்து வச்சு எழுதுங்க சார்... எனக்கு போரடிக்குதுல்ல?” என்று சமீபத்தில் ஒரு நிருபரிடம் ஒரு நடிகை கேட்க, பேரதிர்ச்சிக்கு ஆளானார் அவர்.

பல நடிகர் நடிகைகள் இப்படி கேட்பது வழக்கம்தான் என்றாலும், இவர் போய் இப்படி கேட்டுட்டாரே என்கிற அதிர்ச்சிதான் அது.

நல்ல மனிதர் என்று இன்டஸ்ட்ரியே மதிக்கும் ஒரு இயக்குனரை லவ் மேரேஜ் செய்து, வெகு சில மாதத்திலேயே அவரிடம் டைவர்ஸ் வாங்கிய நடிகையாச்சே... பின்னே அதிர்ச்சி வராதா?

“நாங்க எழுதவே தேவையில்லை. விரைவில் நீங்க நடிச்சு வரப்போற அந்த பார்ட் 2 படம் போதும். உங்களை பற்றி ஊரே பேசும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் நிருபர்.

இன்னுமா புரியல நடிகை யார்னு? நம்ம அமலாபால்தான்! அந்த பார்ட்2 படம், திருட்டுப்பயலே 2.

0 comments :

Post a Comment

 
Toggle Footer