நிவின் பாலி தயாரித்து, நடித்திருக்கும் நண்டுகளூடே நாட்டில் ஓரிடவேலா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் மாடல் மற்றும் மருத்துவருமான ஐஸ்வர்யா லக்ஷ்மி, இப்படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகிறதாம்.
இதுபற்றி ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், தமிழில் அறிமுகமாவதற்கு நிறைய தமிழ் படங்களை பார்த்து வருகிறேன். தமிழில் எது செய்தாலும், வெளிப்படுத்தினாலும் அழகாக இருக்கும். நான் படித்துக் கொண்டிருந்ததால் தொடர்ந்து படங்களை பார்க்க முடியாமல் போனது. இப்போது மணி ரத்னம் இயக்கிய படங்களை பார்த்து வருகிறேன். தமிழ் சினிமா என்ன எதிர்பார்க்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக பரத்வாஜ் ரங்கன் எழுதிய "conversation with mani ratnam" புத்தகத்தையும் படித்து வருகிறேன்.
மேலும், தமிழ் சினிமா நட்சத்திரங்களில் என்றும் பிடித்த நடிகராக ரஜினிகாந்த் திகழ்கிறார். இளம் நடிகர்களில் நான் முதலில் தேர்ந்தெடுப்பது விஜய்சேதுபதி தான். விஜய் சேதுபதி மற்றவர்களின் நடிப்பையும் பின்பற்றாமல், தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால் தான் அவர் நடிப்பை பார்ப்பதற்கு இயல்பாகவும், உண்மையாகவும் இருக்கிறது’ என்கிறார் கியூட்டாக.
Friday, September 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment