மதுரையில் கூடல்நகர் அருகில் பொதும்பு கிராமத்தில் இருளர் சமூகத்தைசேர்ந்த மாணவர்கள் படிக்கக்கூடிய உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, தொடர்ந்து பல ஆண்டு காலமாக அங்கு படித்து வந்த மாணவிகளை தன் ஆசைக்கு இணங்குமாறும், இணங்க மறுப்பவர்களை கட்டாயப்படுத்தியும் வந்துள்ளார்.
இது சம்பவந்தமாக பாதிப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் சொல்லி வந்தனர். அவர்கள் கொதித்தெழுந்து கூடல்நகர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஆரோக்கியசாமியை கைது செய்தனர். கைதுக்கு பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் 90க்கும் மேற்பட்ட மாணவிகளூக்கு தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது இந்த வழக்கு. பின்னர், தீண்டாமை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு 65 மாணவ, மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் அளித்த தீர்ப்பில், ‘’25 ஆண்டுகள் சிறை தண்டனையும்( வன்கொடுமை சட்டத்தின் பிரிவில்), அதன்பின்னர் 30 ஆண்டுகள் (பெண்களை மானப்பங்கு படுத்திய சட்டத்தின் கீழ்), மேலும் தீர்ப்பில் 12 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து கூறப்பட்டுள்ளது.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்குமாறு ஆரோக்கியசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, September 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment