அண்மைக் காலமாக மனித இனம் பூமியை ஒத்த வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற தேடலை அதிகரித்து வருகின்றது. அதிலும் தற்போது பூமியை ஒத்த 9 கோள்கள் (Exoplanets) நமது பூமியை மிகத் தெளிவாக வேவு பார்க்க உகந்த கோணத்தில் அமைந்திருப்பதாகவும் அவற்றில் மனிதனைப் போன்ற அறிவார்ந்த உயிரினங்கள் இருப்பின் அவற்றால் இலகுவாக எம்மைக் கண்காணிக்க முடியும் எனவும் வானியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தவிர சூரிய குடும்பத்தில் பூமியைப் போன்ற தரை மேற்பரப்பைக் கொண்டிருக்கக் கூடிய புதன், வெள்ளி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களையும் குறித்த 9 கோள்களில் இருந்து அவதானிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது 68 பூமியை ஒத்த கோள்கள் (exoplanets) நமது சூரிய குடும்பத்தில் ஏதேனும் ஒரு கிரகத்தையாவது பார்க்கக் கூடிய நிலையமைப்பில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த நிலையமைப்பு பாதையை வானியலாளர்கள் இடம்பெயர் ஸ்தானம் அதாவது Transit zones எனப் பெயரிட்டுள்ளனர். அண்மைக் காலமாக கெப்ளர் தொலைக்காட்டி மற்றும் Super WASP போன்ற அதிநவீன தொலைக்காட்டிகள் எமது பால்வெளி அண்டத்திலும் அதற்கு அப்பாலும் ஆயிரக்கனக்கான புவிக்கு ஒத்த கோள்களைக் (Exoplanets) கண்டுபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இக்கிரகங்கள் சுற்றி வரும் குறித்த அவற்றின் நட்சத்திரங்களையும் விஞ்ஞானிகள் Transits என்றே அழைக்கின்றனர்.
தற்போது பூமியை வேவு பார்க்கக் கூடிய 9 கோள்களிலும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் இல்லை எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
எமது பூமியை வேவு பார்க்க மிக உகந்த கோணத்தில் இருக்கும் 9 கோள்கள்!: வானியல் நிபுணர்கள்
Tuesday, September 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment