‘தியாக தீபம்’ திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழ். நல்லூரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்று கூடி திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வினை முன்னெடுத்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன், “மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்” என்கிற விடயங்கள் அடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராடத்தினை, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பித்திருந்தார். பன்னிரண்டு நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதம் 1987 செப்டம்பர் 26, அவரது மரணத்தோடு நிறைவுக்கு வந்தது.
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment