Thursday, September 28, 2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் உஷாராக இருங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும். உற்சாகமான நாள்.

கடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.  வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் பற்று வரவு  உயரும். உத்யோகத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அலைச்சல் அதிகமாகும் நாள்.

மகரம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாகும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக் காட்டும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer