Sunday, September 24, 2017

மேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்: இன்றையதினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகு படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடு படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கித மாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். அவசர முடிவு களை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடை வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யப் பாருங்கள். முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். சிறப்பான நாள்.

மகரம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை ஏற்படும். தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer