Monday, September 18, 2017

மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள 20வது திருத்தச் சட்டத்தினை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுவதை வரவேற்கின்றோம். ஆனால், தேர்தல் நடைபெறும் காலம் தொடர்பில் தெளிவான வரையறை வேண்டும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மாகாண சபைகளை கலைக்கும் விடயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பிலும் இறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில், இந்த ஒரு தடவை மாத்திரமே மாகாண சபைகளை அவ்வாறு கலைக்க வேண்டும். எதிர்காலத்தில் அதன் ஆட்சிக்காலம் முடிந்த பின்னரே மாகாண சபைகள் கலைக்கப்பட வேண்டும். அதற்கான திருத்தங்களையும் 20வது திருத்தச் சட்டம் உள்வாங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer