Tuesday, September 26, 2017

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார் பேராசிரியர் ஜெனிஃபா.

அவர் தமிழ்த்துறை அலுவலகம் வழியாக சென்றபோது எதிரே வந்த ஜோதிமுருகன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனீபாவை சரமாரியாக குத்தினார்.

இதில் நிலைக்குலைந்த பேராசிரியை ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் திரண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பேராசிரியை ஜெனீபாவை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரிடம் தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஜோதிமுருகன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சரிவர பணியாற்றாததாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டதால் சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஜெனிபா கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் பேராசிரியை ஜெனிபாவை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer