Monday, September 11, 2017

மேஷம்: இன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை மணி 4.48 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: எந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோ கத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

சிம்மம்: உணர்ச்சி பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தரு
வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: இன்றும் மாலை மணி 4.48 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர் கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாலை 4.48 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடை வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நவீன சாதனங்கள் வாங்குவர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள் வார்கள். அழகு, இளமை கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண் பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer