எல்லா தென்னக மொழிகளிலும் நடித்துவிட்டார் நிகிஷா பட்டேல். இருந்தாலும் எதிலும் முதலிடத்திற்கு வர முடியவில்லை. இத்தனைக்கும் மெழுகு பொம்மையே உருகிப்போகிற அளவுக்கு அழகு!
ஏனிந்த தோல்வி? என்று மண்டையை கசக்கியவருக்கு, மறு நொடியே ரிசல்ட்! ‘ஒரு மொழியிலே கான்சன்ட்ரேட் பண்ணும்மா...’ என்றதாம் மூளை.
அந்த ஒரு மொழி? தமிழ்தான் என்ற முடிவுக்கு வந்தவர், கடந்த ஒரு மாதமாக சென்னையை விட்டு நகரவில்லை.
ஒரே வாரத்தில் மூன்று மேனேஜர்களை மாற்றுகிற அளவுக்கு ஆர்வக் கோளாறாகிக் கிடக்கிறார்.
இருந்தாலும், ஒங்க அழகு ஒங்ககிட்டவே இருக்கட்டும் என்று ஒரு டைரக்டரும் அந்தப்பக்கம் லுக் விடவில்லை.
பொண்ணுக்கு ஒரு நல்ல சீட்டெடுத்துக் கொடுப்பியா என் தமிழ்க்கிளியே?
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment