விமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலை மாணவர்கள் 61 பேர் படுகொலை செய்யப்பட்ட 11வது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரட்ணம் விக்னேஸ்வரன் பொது ஈகைச்சுடரினை ஏற்றி மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தியும், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 2006ஆம் ஆண்டு முல்லைதீவு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 61 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் எனப் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Monday, August 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment